பயங்கர குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல்..பொறுப்பேற்ற ஐ.எஸ் அமைப்பு
ஆப்கனிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
குண்டுவெடிப்பு தாக்குதல்
காபூலில் நேற்று முன்தினம் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆனால் பலி எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஆப்கானிஸ்தானின் அவசரநிலை இயக்குநர் ஸ்டெபனோ சோசா தெரிவித்தார்.
கெய்பர் அல்-கந்தஹாரி என்ற நபர் வெடிகுண்டை வெடிக்க செய்ததாக செய்தி வெளியானது.

@Getty Images
ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் ஐ.எஸ் அமைப்பு தற்போது பொறுப்பேற்றுள்ளது.
காபூலில் இந்த ஆண்டு நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். சர்வதேச நாடுகள், ஐ.நா சபை இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

@AFP

@Getty Images