ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொடூரம்... தலை வெட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள்: பிரித்தானியர்கள் நிலை என்ன?
மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர்கள் 50 பேரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் பிரித்தானியர்கள் குறித்து அச்சம் எழுந்துள்ளது.
மொசாம்பிக் நாட்டில் பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் முன்னெடுத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, சுமார் 50 பேர்களின் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 17 வாகனங்களில், வெளியேறிய நிலையில், அவர்கள் மீது ஐ.எஸ் அமைப்பு சரமாரியான துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இதனையடுத்து பலரை பிணைக்கைதியாக்கிய ஐ.எஸ் அமைப்பு, தற்போது அவர்களை கொடூரமாக கொன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
53,000 பேர்கள் குடியிருக்கும் சுரங்க நகரமான பால்மாவை சுமார் 100 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆபிரிக்காவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சேகரிக்கும் பகுதியாக பால்மா அறியப்படுகிறது. இப்பகுதியில் இருந்து சுமார் 1,400 குடியிருப்பாளர்களை படகு மூலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், தெருவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பலரது சடலங்கள் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மாயமானவர்களில் பிரித்தானியர்கள் சிலரும் இருப்பதாக தகவல் வெளியான நிலையில்,
அவர்களும் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளனரா என்ற அச்சம் குடும்பத்தினர் இடையே எழுந்துள்ளது.
