உங்கள் காதலர் உங்களுக்கு துரோகம் செய்கிறாரா? என்னிடம் சொல்லுங்கள்: ரஷ்ய இராணுவ அதிகாரி அதிரடி
காதலன் துரோகம் செய்தால் தனக்கு தெரிவிக்குமாறு பெண்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர்.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி வீடியோ ஒன்றை வெளியிட்ட Colonel Yury Khromov (63) என்ற இராணுவ அதிகாரி, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அப்படி துரோகம் செய்யும் காதலர்களின் அடையாளத்தையும், சமூக ஊடக கணக்குகளையும் தன்னிடம் கொடுக்குமாறு அவர் பெண்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர்களை தான் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரது வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பெண்கள் தங்கள் முன்னாள் காதலன் குறித்த தகவல்களை வெளியிட்டுவருகிறார்கள்.
ஒரு பெண், தன் முன்னாள் காதலனைக் குறித்த தகவல்களை வெளியிட்டு, அவரை அண்டார்டிகாவில் வேலைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
