இப்தார் நிகழ்ச்சிக்கு ஒன்றரை மணி நேரம் முன்னரே வந்ததாக விஜய் மீது புகார் கொடுத்த இஸ்லாமிய அமைப்பு
தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளது.
என்ன காரணம்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீது தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பானது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது.
இந்த புகார் மனுவில் அமைப்பின், பொருளாளர் சையது கவுஸ் என்பவர் கையெழுத்திட்டுள்ளார். அந்த புகார் மனுவில், "கடந்த 7-ம் திகதி அன்று தவெக சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இது ஒரு கண்ணியமான நிகழ்ச்சி ஆகும். கட்சி மாநாடு நிகழ்ச்சி அல்ல. ஆனால், விஜய் நடத்திய நிகழ்ச்சி கண்ணியமான இப்தார் நிகழ்ச்சிக்கு விரோதமாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சம்மந்தம் இல்லாத குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டனர். உண்மையான நோன்பை கடைபிடித்தவர்கள் உள்ள அனுமதிக்கப்படவில்லை.
இதில் கலந்து கொள்வதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் ஒன்றரை மணி நேரம் முன்பாகவே வந்துவிட்டார். நோன்பு திறக்கும் நேரத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்பாக தான் வந்திருக்க வேண்டும்.
அவர் நடத்திய நிகழ்ச்சி விதிமுறைகளுக்கு மாறாக நடந்ததால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், விஜயின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |