அனைத்து நரகமும் அதற்கான வாசலை தளர்த்திவிடும்! இஸ்ரேலின் திடீர் தாக்குதல் குறித்து வெள்ளை மளிகை கருத்து
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காஸாவில் 320க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் சண்டையில், போர் நிறுத்த அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1ஆம் திகதி முடிவடைந்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்க ஹமாஸ் அமைப்பு விருப்பம் தெரிவித்து வருகிறது.
அதேபோல் முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்ரேல் விருப்பம் தெரிவித்தது.
வான்வழித் தாக்குதல்
இந்த நிலையில் இஸ்ரேல் திடீரென காஸா மீது வான்வழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காஸாவில் டசன் கணக்கான ஹமாஸ் இலக்குகளைத் தாக்க தொடங்கியது.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 320க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மருத்துவமனைகள் தெரிவித்தன.
இந்த தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் கூறுகையில், "காஸாவில் தாக்குதல் நடப்பதற்கு முன்பு, ட்ரம்ப் அரசு மற்றும் வெள்ளை மாளிகையை தொடர்புகொண்டு இஸ்ரேல் அரசு ஆலோசனை மேற்கொண்டது.
ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவுப்படுத்தியது போன்று, இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவையும் பயங்கரவாதத்திற்கு இலக்காக முயலும் ஹமாஸ், ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஈரான் உட்பட அனைவரும் அதற்கான ஒரு விலையை கொடுப்பார்கள். அனைத்து நரகமும் அதற்கான வாசலை தளர்த்திவிடும்" என தெரிவித்துள்ளார்.
இதனால், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டத்திற்கு இஸ்ரேல் முக்கியத்துவம் கொடுக்க போவதில்லை என்று தெரிகிறது.
அதேபோல் தொடர்ந்து தாக்குதல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், கிழக்கு காஸா பகுதியில் உள்ள மக்களை வெளியேறும்படியும் இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |