புகலிடமாக மாறிய பாடசாலையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் புகலிடமாக மாறிய பாடசாலையில் தங்கியிருந்த 20 பேர் கொல்லப்பட்டனர்.
20 பேர் பலி
காஸாவில் பாலஸ்தீனியர்களின் புகலிட முகாமாக பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. போரினால் இடம்பெயர்ந்த பல பாலஸ்தீனியர்களில் சிலருக்கு இந்த பாடசாலை அடைக்கலம் அளித்து வந்தது.
இந்நிலையில், மத்திய காஸாவில் உள்ள இந்த பாடசாலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
42,000 பாலஸ்தீனியர்கள்
உயிரிழந்தவர்களின் உடல்கள் Nuseiratயில் உள்ள Al-Awda மருத்துவமனைக்கும், Al-Aqsa மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன.
இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் காஸா மீதான அதன் தாக்குதல் மூலம் 42,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி கொல்லப்பட்டவர்களில் போராளிகள், பொதுமக்கள் என வேறுபாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |