இஸ்ரேல் - கிரீஸ் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்: €3 பில்லியனுக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்
Israel and Greece €3 Billion Defense Partnership deal: இஸ்ரேல் - கிரீஸ் இடையே €3 பில்லியன் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இஸ்ரேல் - கிரீஸ் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்
இஸ்ரேல் மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
இதில் கிட்டத்தட்ட €3 பில்லியன் (சுமார் $3.48 பில்லியன்) மதிப்பான இராணுவ தளவாட கொள்முதல் ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் இறுதி செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலில் முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட அதிநவீன மற்றும் பல அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பை கிரீஸ் நாட்டிற்கு அமைத்துக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஈரானுடன் ஏற்பட்ட மோதலின் போது கிடைத்த ஆழ்ந்த செயல்பாட்டு அனுபவங்களும், நுண்ணறிவும் இந்த பாதுகாப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |