20 படகுகளில் காசா நோக்கி சென்ற 175 ஆர்வலர்கள்: 2 பேரை சிறைபிடித்த இஸ்ரேல்
காசா நோக்கி சென்ற 2 ஆர்வலர்களை இஸ்ரேல் சிறைப் பிடித்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய கடற்படை அத்துமீறல்
இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், தொண்டு நிறுவனங்கள் காசாவிற்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட படகுகளில் ஸ்பெயின் மற்றும் பார்சிலோனாவை சேர்ந்த தன்னார்வலர்கள் காசாவிற்கு பயணம் செய்தனர்.
மத்திய தரைக்கடல் பகுதி வழியாக வந்த இந்த படகுகளை இஸ்ரேல் இடைமறித்துள்ளது.

மேலும் படகில் உள்ளவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு இஸ்ரேலிய படையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
2 ஆர்வலர்கள் கைது
இறுதியில் படகில் இருந்த பிரேசில் நாட்டை சேர்ந்த தியாகோ அவிலா மற்றும் பாலஸ்தீன- ஸ்பெயின் குடியுரிமை பெற்ற சைஃப் அபுகேஷேக் இருவரையும் கைது செய்து விசாரணைக்காக இஸ்ரேலுக்கு அழைத்து சென்றனர்.
இஸ்ரேலிய தரப்பு வெளியிட்ட தகவலில், சிறைபிடிக்கப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதாகவும், அபுகேஷேக் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வதாகவும், அவிலா சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆனால் இஸ்ரேல் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டிற்கு எந்தவொரு ஆதாரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |