லெபனான் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! 21 பேர் பலி
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
ஹிஸ்புல்லா
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஹமாஸிற்கு ஆதரவளித்து வருகின்றனர்.
ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதும், அவர்கள் பதில் தாக்குதல் நடத்துவதும் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக, இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலையும் நடத்தி வருகின்றது.
21 பேர் பலி
இந்நிலையில் நேற்று இஸ்ரேல் மீண்டும் நடத்திய தாக்குதலில் லெபனானில் 21 பேர் பலியாகினர். அதே சமயம் காஸாவில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஐ.நா தலைவர் Antonio Guterres முற்றுகையிடப்பட்ட வடக்கு காஸாவில் "மோசமான அளவு மரணம், காயம் மற்றும் அழிவு" ஏற்பட்டுள்ளது என தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |