காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் எச்சரிக்கை
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கடந்த 5 வாரங்களாக அமுலில் உள்ள நிலையில் புதன்கிழமை காசாவின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தது 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

காசாவின் கிழக்கு ஸைதூன் பகுதியில் உள்ள மத வழிபாட்டு தளத்தின் மீது இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் மீட்புக் குழுவினர் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய நபருடன் தொடர்பு... கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்: ட்ரம்ப் பயன்படுத்திய வார்த்தையால் சர்ச்சை
இஸ்ரேல் தரப்பு விளக்கம்
தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் வழங்கிய விளக்கத்தில், ஹமாஸின் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கான் யூனிஸ் பகுதியில் உள்ள இஸ்ரேலிய துருப்புகள் மீது ஹாமஸ் படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதால் இந்த பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் கூற்றை மறுத்துள்ள ஹமாஸ், இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்தை பலவீனப்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |