காசாவில் இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதல்: இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு
இஸ்ரேலிய ராணுவ படை காசாவில் குண்டு வீச்சு தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு செய்தி நிறுவனமான அல் ஜசீரா வெளியிட்ட சமீபத்திய தகவலில், இஸ்ரேலிய ராணுவம் காசா நகர் மீதான இராணுவ தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.
காசாவின் வடமேற்கு பகுதியில் நடத்தப்படும் இந்த தாக்குதலில் பல கார் குண்டு வெடிப்பு சம்பவங்களும், குண்டு வீச்சு சம்பவங்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய காசாவின் அல்-புரைஜ் முகாமின் வடக்கு பகுதியில் பீரங்கி தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் காசா நகரை விட்டு வெளியேறிய மக்கள் தங்கியிருந்த பள்ளி மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, இதில் இரண்டு குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |