லெபனான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்: ஈரான் விதித்த 2 நிபந்தனைகள்
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய படைகள் தாக்குதல்
தெற்கு லெபனான் மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற இருக்கும் அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்த தாக்குதலானது நடைபெற்றுள்ளது.
இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் Nabatieh நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் Nabatieh நகரத்தின் முக்கிய குடியிருப்பு கட்டிடங்கள், உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.

ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேலிய படையினருக்கும் நடந்த இந்த மோதலில் லெபனான் நாட்டின் இராணுவ படையினர் நேரடியாக பங்கேற்கவில்லை.
அதே சமயம் இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலிய அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த லெபனான் அரசு தரப்பு தயாராக இருந்த நேரத்தில் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் நிபந்தனைகள்
இதற்கிடையில் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமெனில், லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் மற்றும் ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகளை ஈரான் தரப்பு முன்வைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |