வடக்கு காசாவில் இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: தாக்குதலுக்கான காரணத்தை விளக்கிய IDF
வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய படைகள் தாக்குதல்
வியாழக்கிழமை நள்ளிரவு, வடக்கு காசாவில் உள்ள கட்டிடம் ஒன்றில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவர் நுழைந்ததை அடுத்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
தாக்குதல்கள் குறித்த திட்டமிடுதலை தடுக்கவும், தாக்குதல் தொடர்பான பதற்றம் அதிகரிப்பதை தடுக்கவும் இந்த உடனடி நடவடிக்கை தேவைப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

காசாவில் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதை குறிக்கவில்லை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளன.
மேலும், இந்த தாக்குதல் ஹமாஸுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |