போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு: ஹமாஸ் உளவுத் தலைவரை வீழ்த்திய இஸ்ரேல்
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் இராணுவ உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸ் உளவுத் தலைவர்
இஸ்ரேல் பணயக்கைதிகளுக்கு பதிலாக பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததால், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தெற்கு காசாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸின் முக்கிய இராணுவ உளவுத்துறை தலைவர் ஒசாமா தபாஷ்(Osama Tabash) கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
X தளத்தில் வெளியிடப்பட்ட IDF அறிக்கையின்படி, தபாஷ் ஹமாஸின் முக்கிய கண்காணிப்பு மற்றும் இலக்கு இயக்கங்களை ஒருங்கிணைத்து வழி நடத்தி வந்துள்ளார்.
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடிய தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஒசாமா தபாஷ், ஊடுருவல் மற்றும் இலக்கு நிர்ணய நடவடிக்கைகளை திறம்பட திட்டமிட்டு செயல்படுத்தியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தபாஷ் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தபாஷ் எங்கு, எப்போது கொல்லப்பட்டார் என்ற விவரங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட மறுத்துவிட்டது. ஹமாஸ் அமைப்பும் இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |