காசா மருத்துவமனை மீதான கொடூர தாக்குதல்: புதிய விளக்கத்தை வெளியிட்ட இஸ்ரேல்!
காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பு புதிய விளக்கம் அளித்துள்ளது.
மருத்துவமனை மீது தாக்குதல்
நேற்று இஸ்ரேலிய ராணுவம் காசாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனை மீது இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் வரை கொல்லப்பட்டனர்.
📍Gaza | It is unacceptable for a health facility like Nasser Medical Complex to be damaged in a strike and for medical personnel, journalists, patients & first responders to be killed and injured.
— ICRC (@ICRC) August 26, 2025
Medical facilities, civilians, journalists & first responders must be protected. pic.twitter.com/W87IWY0RIZ
இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலுக்கு பிரான்ஸ், துருக்கி, ஜேர்மனி போன்ற பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் தரப்பு விளக்கம்
இந்நிலையில், நாசர் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேலிய தரப்பு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இஸ்ரேலிய துருப்புகள் மீது தாக்குதலை முன்னெடுக்க ஹமாஸ் அமைப்பினர் நாசர் மருத்துவமனை பகுதியில் கேமராக்களை பொறுத்தி இருந்தனர்.
இந்த கேமராக்கள் உதவி மூலம் துருப்புகளின் நடமாட்டத்தை கண்காணித்து தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டு இருந்ததாகவும் IDF தெரிவித்துள்ளது.
எனவே தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், முந்தைய காலங்களில் ஹமாஸ் அமைப்பினர் மருத்துவமனையை இராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாலும் இந்த முடிவை இஸ்ரேல் உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 6 பேர் பயங்கரவாதிகள் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்த வாதத்தை நிரூபிக்க தேவையான எந்தவொரு ஆதாரங்களையும் இஸ்ரேல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |