காசாவில் சிதைக்கப்பட்ட 46,000 வீடுகள்: வாழ்வாதாரத்திற்காக இடம்பெயரும் பாலஸ்தீனியர்கள்
இஸ்ரேலின் போர் நடவடிக்கையில் இதுவரை 46,000 வீடுகள் காசா பகுதியில் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பதாக தகவல் ஐக்கிய நாடுகள் அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
சிதைக்கப்பட்ட வீடுகள்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை கடந்த மாதம் 7ம் திகதி முதல் நடைபெற்று வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் 4 நாள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பணயக் கைதிகளை பரிமாறிக் கொள்வது மற்றும் காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவை இந்த போர் நிறுத்தத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 58 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்துள்ளனர். அதே சமயம் 150 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் படையினருக்கு எதிரான இஸ்ரேலிய படையினரின் போர் தாக்குதலில் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 46,000 வீடுகள் சிதைக்கப்பட்டு இருப்பதாக ஐ.நா.வின் இன்டர்-ஏஜென்சி கமிஷன் அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
During the fighting in Gaza and in the northern part of the Gaza Strip, a total of 46 thousand houses were destroyed, that is, more than 50% of all buildings
— NEXTA (@nexta_tv) November 28, 2023
This is reported by the UN Inter-Agency Commission. pic.twitter.com/BiabBGx75R
இந்த எண்ணிக்கை அப்பகுதியில் உள்ள வீடுகளின் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர், சுமார் 80% பேர் காசாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |