வடக்கு காசாவில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: 11 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு
வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று மாலை நடத்திய கொடூரமான ட்ரோன் தாக்குதலில் 11 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் மீது தாக்குதல்
பெய்ட் லாஹியாவில் அமைதியாக கூடியிருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு பத்திரிகையாளர்கள் உட்பட ஒன்பது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள இந்தோனேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அல்-கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த மனிதாபிமான நிவாரணப் பணியாளர்கள் குழுவை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலஸ்தீனிய மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாக்குதலை உறுதிப்படுத்திய இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) பெய்ட் லாஹியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், "குறிவைக்கப்பட்ட நபர்கள் ஆபத்தான பயங்கரவாதிகள் என்றும், டிரோன்களை இயக்க தேவையான அதிநவீன உபகரணங்களை சேகரித்து வந்தனர்" என்றும் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த குற்றச்சாட்டை பாலஸ்தீனிய மனித உரிமை ஆர்வலர்கள் மறுத்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ஆம் திகதி முடிவடைந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |