இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி: மோசடி குற்றச்சாட்டுகளை நிராகரித்த தேர்தல் ஆணையம்
Israel Election Results Confirmed, Fraud Rejected: இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மத்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடிய எந்தவித முறைகேடும் கண்டறியப்படவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 27-ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், எதிர்க்கட்சித் தலைவர் Gadi Eisenkot தலைமையிலான அணி 48 இடங்களையும் பெற்றது. அதேசமயம், அரபு கட்சிகளான Ra’am மற்றும் Joint List இணைந்து சாதனை அளவில் 19 இடங்களை கைப்பற்றின.
120 உறுப்பினர்களைக் கொண்ட க்னெசெட் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 61 இடங்கள் தேவைப்படுகிறது. ஆனால் எந்த அணியும் அந்த எண்ணிக்கையை எட்டாததால், புதிய அரசை அமைப்பதில் அரசியல் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது.
தேர்தல் முடிவுகள் Isaac Herzog ஜனாதிபதியிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி, ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ள வேட்பாளருக்கு அரசு அமைக்கும் பொறுப்பை வழங்க உள்ளார். தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தேவையெனில் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு கிடைக்கலாம்.
இதற்கிடையில், தேர்தலில் முறைகேடு நடந்ததாக Benjamin Netanyahu மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக அரபு கட்சிகளின் வெற்றியில் வெளிநாட்டு தலையீடு இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையம் 9,069 வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தபோது தேர்தல் முடிவை மாற்றக்கூடிய எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
அனைத்து புகார்களும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தேர்தல் ஆணையத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதியான Noam Sohlberg, தேர்தல் முடிவுகள் குறித்து ஆதாரமற்ற சந்தேகங்களை எழுப்புவது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிததுள்ளார். சட்டப்படி அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய சூழலில் தேசிய ஒற்றுமை அரசு அல்லது புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்புகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |