போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் தாக்குதல்: காசாவில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை
இஸ்ரேல் நடத்திய போர் தாக்குதலில் இதுவரை 72,819 பேர் காசாவில் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
72,819 பேர் உயிரிழப்பு
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் - காசா இடையிலான போர் மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் இரண்டு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தமானது மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் அவ்வப்போது இஸ்ரேலிய படைகள் காசா மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 72,819 பேர் காசாவில் கொல்லப்பட்டு இருப்பதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1,72,894 பேர் என அதிகரித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காசாவின் மருத்துவ புள்ளி விவரத்தின் படி, கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 16 பேர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 39 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் திகதி இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து மட்டும் கிட்டத்தட்ட 922 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 2,786 பேர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் மே 29ம் திகதி நடத்திய தாக்குதலில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கட்டிடம் தகர்க்கப்பட்டது. இதில் 10 பேர் வரை கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |