போரை நிறுத்த அமெரிக்காவிடம் நிபந்தனைகளை முன்வைக்கும் இஸ்ரேல்
லெபனானில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தூதர தீர்வுக்கான நிபந்தனைகளுடன் இஸ்ரேல் கடந்த வாரம் அமெரிக்காவிடம் ஆவணம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதம் ஏந்தாதவகையில்
குறித்த விசேட சந்திப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சார்பில் தலா இரு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். லெபனானில் இனி ஹிஸ்புல்லா படைகள் ஆயுதம் ஏந்தாதவகையில் கண்காணிக்கும் பொருட்டு, இஸ்ரேல் படைகளை அந்த நாட்டில் நிறுத்தவும்,
லெபனான் எல்லை அருகே இராணுவ கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கவும் நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி லெபனான் வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ளும் உரிமையும் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் கோரியுள்ளது.
ஏற்கும் வாய்ப்பில்லை
ஆனால், லெபனானும் சர்வதேச சமூகமும் இஸ்ரேலின் இந்த நிபந்தனைகளை ஏற்கும் வாய்ப்பில்லை என்றே அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க வெள்ளை மாளிகையும், உள்விவகார அமைச்சரகமும் இதுவரை இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. மட்டுமின்றி, வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதரகங்களும் நிபந்தனைகள் தொடர்பில் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |