நாங்கள் தொடங்கிவிட்டோம்…! காசாவை தரைமட்டமாக்கும் இஸ்ரேல்: பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட வீடியோ
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் அது குறித்த வீடியோ ஒன்றை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிர்ந்துள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன போர்
சனிக்கிழமை அதிகாலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் தொடங்கிய ஏவுகணை தாக்குதல் தற்போது முழுநீள போராக நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரின் திடீர் தாக்குதலால் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன், இஸ்ரேலியர்கள் பலர் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டனர்.
இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல், காசா பகுதியை உருக்குலைப்போம், மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு நபரையும் அழிப்போம் என்று சூளுரைத்தனர்.
பெஞ்சமின் நெதன்யாகு பகிர்ந்துள்ள வீடியோ
இந்நிலையில் X தளத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் "நாங்கள் தொடங்கி விட்டோம், இஸ்ரேல் வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார்.
Benjamin Netanyahu: "We started. Israel will win" ?? https://t.co/tAH7MY8FI0
— NEXTA (@nexta_tv) October 9, 2023
மேலும் அந்த வீடியோவில், காசா பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் தரைமட்டம் ஆக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |