மோடி அரசு இஸ்ரேலை ஆதரிப்பது ஏன்? உடைத்து பேசும் சைதை சாதிக்! (வீடியோ)
காசா மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரும் மாறி மாறி தாக்குதலை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையில், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டைத்தான் இந்தியா நீண்டகாலமாக எடுத்துவந்திருக்கிறது.
ஆனால் தற்போது மோடியின் அரசு இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டிவருகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் போர்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது கடந்த சனிக்கிழமை 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.
இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது.
இந்தியா ஆதரிப்பதன் பின்னணி
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் மேற்கொண்டதை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.
இஸ்ரேலுக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் என்று அறிவித்திருந்தார்.
ஹமாஸ் படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் தீவிரமான வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது.
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளார்கள். ஆனாலும் பாலஸ்தீன மக்களுக்கு எற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு ஆதரவை ஏன் வழங்கி வருகின்றார் என்று குறித்து சைதை சாதிக் உண்மையை உடைத்து பேசியுள்ளார். அது பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |