காசா பகுதியில் தரைவழி தாக்குதல்: வீடியோ வெளியிட்ட இஸ்ரேலிய ராணுவம்
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி தாக்குதல் தொடர்பான வீடியோக்களை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தாக்குதல் 4வது வாரத்தை தாண்ட உள்ள நிலையில், ஹமாஸ் படையினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில் ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து இஸ்ரேல் ராணுவம் அழிக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
The Israel Defense Forces publishes footage from an expanded ground operation in the Gaza Strip pic.twitter.com/NvqzWqDmeb
— NEXTA (@nexta_tv) November 4, 2023
மேலும் இலக்கை அடையும் வரை போர் நிறுத்தம் என்பது கிடையாது என்றும் இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு இருப்பதுடன், பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தொடங்கி இருக்கும் தரைவழி தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
The IDF continues its expanded ground operation in the northern Gaza Strip. Israeli Army eliminated terrorists operating in the area, uncovered tunnel shafts used for terrorist purposes and located the organization's weapons.
— NEXTA (@nexta_tv) November 4, 2023
pic.twitter.com/qs2G4F5b0d
இந்த வீடியோவில் இஸ்ரேலிய டாங்கிகள் காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை சுக்கு நூறாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |