நள்ளிரவு அலறிய காசாவின் Rafah நகரம்: 2 பிணைக் கைதிகள் விடுவிப்பு: இஸ்ரேலின் கோர தாண்டவம்
காசாவின் Rafah பகுதியில் இருந்து இரண்டு பிணைக் கைதிகளை மீட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் வான் தாக்குதல்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான தாக்குதல் மாதக்கணக்காக நீடித்து வரும் நிலையில், காசாவின் தெற்கு பகுதி நகரான Rafah மீது இஸ்ரேலிய படைகள் வான் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த திடீர் தாக்குதலில், 37 மக்கள் வரை உயிரிழந்து இருப்பதாகவும், டஜன் கணக்கானோர் காயமடைந்து இருப்பதாகவும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
AP
இஸ்ரேலின் இந்த தாக்குதல், வன்முறை என்று பாலஸ்தீனிய சிவப்பு பிறை(Palestinian Red Crescent) அமைப்பு தெரிவித்துள்ளது.
2 பிணைக் கைதிகள் மீட்பு
இந்நிலையில் காசாவின் Rafah பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இரண்டு பிணைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது.
மீட்கப்பட்ட நபர்கள் பெர்னாண்டோ சைமன் மர்மன்(Fernando Simon Marman, 60), லூயிஸ் ஹார்(Louis Har, 70) என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் கூட்டு முயற்சியின் கீழ் இரண்டு பிணைக் கைதிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |