சுரங்கப் பாதையில் இருந்து பதுங்கி பாயும் ஹமாஸ் அமைப்பினர்: வெளியான வீடியோ
இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையே தாக்குதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மொத்தமாக அழிப்பதற்காக காசாவிற்குள் இஸ்ரேல் ராணுவம் தரைப்படைத் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இருப்பினும் ஹமாஸ் அமைப்பினரின் ஆபத்தான சுரங்க பாதை நகரங்கள் குறித்த எச்சரிக்கையுடனே இஸ்ரேலிய படைகள் முன்னேறி வருகின்றனர்.
ஹமாஸ் படை வெளியிட்டுள்ள வீடியோ
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்தும் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
Hamas terrorists have published videos of attacks on the IDF in the Gaza Strip
— NEXTA (@nexta_tv) November 2, 2023
The video shows the terrorists crawling out of their underground tunnels and attacking the Israeli military in the back using Yasin anti-tank grenade launchers. pic.twitter.com/tp0lEKnWEp
இந்த வீடியோவில், ஹமாஸ் அமைப்பினர் சுரங்க பாதைகளுக்குள் இருந்து வெளியே தவழ்ந்து வந்து இஸ்ரேலிய துருப்புகளின் மீது யாசின் டேங்க் எதிர்ப்பு கையெறி குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் காட்சிகளை பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |