இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே வலுக்கும் மோதல்: கொல்லப்பட்ட 4 இஸ்ரேலிய வீரர்கள்
ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் - ஹில்புல்லா இடையே வலுக்கும் மோதல்
தெற்கு லெபனானில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா படையினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 16 பேர் வரை கொல்லப்பட்டதாக லெபனான் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சரியாக பின்பற்றவில்லை. அதன் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட 4 இஸ்ரேலிய வீரர்கள்
இஸ்ரேலிய படையினருக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை எல்லை பகுதியில் நடந்த சண்டையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 4 வீரர்களும் டாங்கியில் சென்று கொண்டிருந்த போது ஹிஸ்புல்லா படையினரால் தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய தரப்பு உறுதி செய்துள்ளது.
இந்த தாக்குதல் ட்ரோன் அல்லது பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை மூலமாக நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மற்றொரு சம்பவத்தில், வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் தாக்கப்பட்டதில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் ரிசர்வ் அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |