பிணைக் கைதிகள் விடுதலையில் தாமதம்: ஹமாஸ் அளித்த விளக்கம், டிரம்ப் விடுத்த எச்சரிக்கை
பிணைக் கைதிகள் ஒப்படைப்பில் தாமதம் ஏற்பட்டால் மீண்டும் தாக்குதல் தொடங்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பிணைக் கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த நடவடிக்கைகள் கடந்த வாரம் அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு பிறகு நடைமுறைக்கு வந்தது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாக, மீதமுள்ள உயிருள்ள மற்றும் இறந்த இஸ்ரேலிய பிணைக் கைதிகள் 48 பேர் 72 மணி நேரத்திற்குள் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து உயிருள்ள 20 பிணைக் கைதிகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டனர், மேலும் புதன்கிழமை நிலவரப்படி, இறந்த 9 பிணை கைதிகளின் உடல்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஹமாஸால் ஒப்படைக்கப்பட்ட 10 உடல் இஸ்ரேலிய பிணைக் கைதியின் உடல் இல்லை என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்ததை தொடர்ந்து இருதரப்பிடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் விளக்கமும், டிரம்ப் எச்சரிக்கையும்
பதற்றம் அதிகரித்ததை அடுத்து இறந்த பிணைக் கைதிகளின் உடல்களை கண்டுபிடிப்பதில் சிரமம் இருப்பதாகவும், அவை இடிபாடுகளில் புதைந்த இடங்கள் தங்களுக்கு தெரியாது என்றும் ஹமாஸ் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நியாயமான முறையில் மீட்க முடிந்த அனைவரது உடல்களையும் திருப்பி அளித்து இருப்பதாகவும், மீதமுள்ளவர்களின் உடல்களை கண்டுபிடிப்பதற்கு சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் உடல்களை ஒப்படைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலை வெளிப்படுத்தியதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், ஹமாஸ் ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் முழுமையாக இணங்கவில்லை என்று தான் நினைத்தால் போர் நடவடிக்கைகள் உடனடியாக மீண்டும் தொடங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக CNN தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், நான் வார்த்தை சொன்னவுடன் இஸ்ரேலிய ராணுவம் மீண்டும் காசா தெருக்களுக்கு திரும்பும் என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |