பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஹமாஸ் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் குற்றச்சாட்டு
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து ஹமாஸ் பிடியில் உள்ள உயிருள்ள 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் இஸ்ரேலிய படைகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான்கு உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் இன்று ஒப்படைக்கப்படும் என்று ஹமாஸ் ஆயுதப் பிரிவு அறிவித்து இருந்த நிலையில் மீதமுள்ள 2 உடல்கள் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதில் உள்ள 72 மணி நேர காலக்கெடுவை குறிப்பிட்டு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், அமைதி ஒப்பந்தத்தின் கடமைகளை ஹமாஸ் செய்ய தவறி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சில பிணைக் கைதிகளின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்க காலம் எடுக்கலாம் என்று ஹமாஸ் முன்னரே சுட்டிக் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |