ஹமாஸுடன் தொடர்பு..! Al Jazeera நிறுவனத்தின் செய்தியாளரை கொலை செய்த இஸ்ரேல்
Al Jazeera நிறுவனத்தின் செய்தியாளரை கொலை செய்து இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
Al Jazeera குற்றச்சாட்டு
வியாழக்கிழமை Al Jazeera நிறுவனத்தின் செய்தியாளர் Ismail Al-Ghoul-யை கொலை செய்து இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின் போது Ismail Al-Ghoul-யை கொல்லப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் முக்கிய அங்கமாக Ismail Al-Ghoul இருந்ததாக ஆதாரம் எதையும் வெளியிடாமல் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இஸ்ரேலின் குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்”(baseless allegations) என Al Jazeera செய்தி நிறுவனம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக கத்தார் ஒளிபரப்பாளர் வழங்கிய தகவலில், காசா வான் தாக்குதலின் போது செய்தியாளர் Ismail Al-Ghoul மற்றும் கேமரா நபர் Ramy El Rify இருவரும் house of Ismail Haniyeh என்ற இடத்திற்கு அருகே படம் பிடித்து கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |