தகர்ந்த காசா போர் நிறுத்தம்: இஸ்ரேலிய வான் வழித் தாக்குதலில் 9 பேர் பலி
காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையில் நீடித்த 5 வார போர் நிறுத்தம் தற்போது தகர்ந்துள்ளது.
காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 9 பேர் வரை கொல்லப்பட்டதாக காசாவின் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
நிலைமை மோசமடைந்ததே காசாவில் நடந்த மூன்று வான்வழித் தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகமான ரிமால் பகுதியில் வாகனத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்து இருப்பதாக உள்ளூர் மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |