காஸா மீதான தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் பலி! இது பேரழிவை ஏற்படுத்தும் - ஐநா கவலை
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
ஏவுகணை தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் டெய்ர் அல் பகுதியில் தஞ்சமடைந்தவர்களில் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் 93 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் காஸா நகரில் அகதிகள் முகாம் மற்றும் வடக்கு பகுதிகளில் இஸ்ரேல் நேற்று மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் முகாம்களில் தஞ்சமடைந்திருந்தவர்களில் குழந்தைகள் உட்பட 17 பேர் பலியாகினர். இதனையடுத்து இறந்தவர்களின் உடல்கள் நஸ்ரேத் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பேரழிவை ஏற்படுத்தும்
இதற்கிடையில் ஐ.நா தலைவர் கூறுகையில், "ஐ.நா-வின் நிவாரண உதவிகளை தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பேரழிவை ஏற்படுத்தும்" என கவலை தெரிவித்தார்.
மத்திய காஸா பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |