உலகில் எங்கு இருந்தாலும் ஹமாஸ் தலைவர்களை வேட்டையாட திட்டம்..! மொசாட் தயாரித்துள்ள பெயர்கள்
ஹமாஸ் தலைவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் நிறைவுக்கு வந்து இருக்கும் நிலையில், இரு படைகளுக்கும் இடையிலான தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையிலான போர் நிறைவடைந்த பிறகு, ஹமாஸ் தலைவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களை வேட்டையாடி கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் படையினரை கொலை செய்யும் இந்த திட்டத்திற்கு ‘ஆபரேஷன் ராத் ஆப் காட்” போன்ற திட்டத்தை ஒப்புதல் அளிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாக தெரியவந்துள்ளது.
அவற்றில் குறிப்பாக துருக்கி மற்றும் லெபனான் நாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களை கொல்ல இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AFP
மொசாட் படையினர் தயாரித்து வரும் இந்த பட்டியலில், இஸ்மாயில் ஹனியே, முகம்மது டெய்பி, யாயா சின்வார் மற்றும் காலித் மஷால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் இஸ்மாயில் ஹனியே பாலஸ்தீனத்தின் முன்னாள் பிரதமர்(2006) என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இஸ்ரேல் மற்றும் மொசாட்டின் இந்த திட்டம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என மொசாட் அமைப்பின் முன்னாள் இயக்குநர் இப்ரெய்ம் ஹலெவி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |