ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் பகீர் திட்டம்... கசிந்த அமெரிக்க உளவுத்துறை ரகசியம்
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான அமெரிக்க உளவுத்துறையின் இரண்டு மிக ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளது.
ஈரானுக்கு எதிராக
அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் மற்றும் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தும் அமைப்பு ஒன்று குறித்த ஆவணங்களை தயாரித்துள்ளது.
அதில், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் விரிவான திட்டங்கள் பதிவாகியுள்ளது. அக்டோபர் 15 மற்றும் 16ம் திகதிகளில் தொகுக்கப்பட்ட அந்த ஆவணங்கள் தற்போது ஈரான் ஆதரவு டெலிகிராம் சமூக ஊடக பக்கத்தில் பரப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இராணுவப் பயிற்சிகள், ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கவேண்டிய தயாரெடுப்புகளாகவே பார்க்கப்படுகிறது. அக்டோபர் 1ம் திகதி சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது.
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் உலக நாடுகளின் அழுத்தங்களை பொருட்படுத்தாமல் இஸ்ரேல் ரகசியமாக தயாரெடுத்து வருகிறது. இஸ்ரேல் விமானப்படையின் பொறுப்பு என அதில் ஒரு ஆவணத்திற்கு தலைப்பிட்டுள்ளனர்.
உக்கிரமான ஒரு தாக்குதலுக்கு
இஸ்ரேல் விமானப்படையின் சமீபத்திய பயிற்சிகள், ஈரானுக்கு எதிரான தயாரெடுப்பு என்றே கூறப்படுகிறது. அந்தரத்தில் எரிபொருள் நிரப்புதல், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, ஈரான் தாக்குதல் தொடுத்தால் ஏவுகணை அமைப்பை இடமாற்றம் செய்தல் உள்ளிட்டவை முதல் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆவணத்தில், ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ தளவாடங்களை உரிய இடங்களுக்கு நகர்த்தும் இஸ்ரேலிய திட்டத்தை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க உளவு அமைப்புகளால் திரட்டப்பட்ட இந்த தரவுகளில், இஸ்ரேல் உக்கிரமான ஒரு தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவே தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்த ஆவணங்கள் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் முழுமையான திட்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளனவா என்பது தெளிவாக இல்லை என்றே கூறுகின்றனர்.
கசிந்துள்ள இந்த ஆவணங்களால் அமெரிக்க அரசாங்கத்தில் உடனடி கவலையைத் தூண்டியுள்ளது என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, ஜேர்மனியில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் எழுப்பிய கேள்விக்கு,
ஈரான் மற்றும் அதன் இலக்குகள் மீது இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதல் தொடர்பில் தமக்கு தகவல் தெரியும் என்றே குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |