ஈரானில் ரயில் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் இஸ்ரேல் - பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரானில் ரயில்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரயில் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் இஸ்ரேல்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் 5வது வாரத்தை எட்டியுள்ளது.
ஹார்மோஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா விதித்த 10 நாட்கள் கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஈரான் மின்நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் தற்காலிக போர் நிறுத்தத்திற்காக நீரிணையை திறக்க முடியாது என ஈரான் உறுதியாக உள்ளதோடு, எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பிராந்தியம் முழுவதையும் தாக்குவோம் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவுதி அரேபியாவை பஹ்ரைனுடன் இணைக்கும் கிங் ஃபஹத் இணைப்புப் பாலம் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பாரிய தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஈரானில் உள்ள ரயில்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‼️ هشدار فوری به استفادهکنندگان و مسافران قطارها در کشور ایران.
— ارتش دفاعی اسرائیل | IDF Farsi (@IDFFarsi) April 7, 2026
⭕️ شهروندان گرامی، به منظور امنیت شما، خواهشمندیم از این لحظه تا ساعت ۲۱:۰۰ به وقت ایران، از استفاده و سفر با قطار در سراسر ایران خودداری نمایید.
⭕️ حضور شما در قطارها و در مجاورت خطوط راهآهن جانتان را به خطر می… pic.twitter.com/Fm3BAAEFra
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள பதிவில், "ஈரான் நேரப்படி இரவு 9 மணி வரை ஈரானில் ரயில்களில் பயணிக்க வேண்டாம் மற்றும் ரயில் பாதைகளின் அருகே செல்ல வேண்டாம். மீறினால் உங்கள் உயிருக்கு அது ஆபத்தை விளைவிக்கும். என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |