புதிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: 34 வாரங்களாக தொடரும் இஸ்ரேல் மக்கள் போராட்டம்
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதிமன்ற சீரமைப்பு சட்டத்திற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் 34வது வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
34 வாரங்களாக போராடும் மக்கள்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய நீதிமன்ற சீரமைப்பு சட்டத்தை அறிவித்ததில் இருந்து அந்த நாட்டு மக்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் என்றும், மேலும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களை குறைக்கும் என்ற கவலையிலும் மக்கள் புதிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Gilad Furst
அத்துடன் இந்த புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் டெல் அவிவ் நகரில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தீவிரமடையும் போராட்டம்
இதற்கிடையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய சட்டத்திருத்தத்திற்கான மசோதா முன்வரைவு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்டது.
Olivier Fitoussi/Flash90
இதனால் இஸ்ரேல் மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்து வருகிறது என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |