லெபனானில் ஹிஸ்புல்லா முழுவதுமாக அழிக்கப்படும்: நெதன்யாகு சூளுரை
ஹிஸ்புல்லா எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த போவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
நெதன்யாகு சூளுரை
ஈரான் ஆதரவு பெற்ற லெபனானை தலைமையிடமாக கொண்ட ஹிஸ்புல்லா படையினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்க இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை தனது டெலிகிராம் பக்கத்தில் நெதன்யாகு வெளியிட்ட காணொளியில், ஹிஸ்புல்லா படையினருக்கு எதிரான இஸ்ரேலிய ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதலை அதிகப்படுத்தி ஹிஸ்புல்லா படையினரை முற்றிலுமாக ஒடுக்குவோம் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஒட்டுமொத்த வலிமையையும் தகர்ப்பதே இஸ்ரேலின் முக்கிய நோக்கம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்களை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கொன்று இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெற்கு மற்றும் கிழக்கு லெபனான் பகுதியில் உள்ள இஸ்ரேலிய படையினர் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |