3 வயது பிள்ளைகளுக்கும் கோவிட் சோதனைகள் கட்டாயம்! எந்த நாட்டில் தெரியுமா?
இஸ்ரேலில், 3 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு COVID-19 பரிசோதனைகள் கட்டாயமாக்கப்படவுள்ளன.
உலகளவில் தடுப்பூசித் திட்டத்தை முதலில் தொடங்கிய நாடுகளில், இஸ்ரேலும் ஒன்று. அங்கு பெரியவர்களிடையே தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகமாக இருந்தபோதிலும், கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலிய அரசு இதற்காகவே ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த வாரத்திலிருந்து 3 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கு COVID-19 பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது, பரிசோதனைகள் மேற்கொள்வது கட்டாயம்.
12 வயதுக்கும் மேற்பட்ட பிள்ளைகள், கிருமித்தொற்று இல்லை என்று குறிப்பிடும் சான்றிதழ்களைக் காட்டுவது, ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டது.
3 வயதிலிருந்து 11 வயதுடைய பிள்ளைகளுக்குப் பரிசோதனைகள் இலவசம் என்று அந்நாட்டுப் பிரதமர் நஃப்டாலி பென்னெட் (Naftali Bennett) கூறியுள்ளார்.
இஸ்ரேலில், தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோருக்குக் பூஸ்டர் தடுப்பூசி (கூடுதல் தடுப்பூசி) போடும் திட்டம் நடப்பில் உள்ளது. அந்த வயது வரம்பைக் குறைப்பது குறித்து அரசு பரிசீலித்துவருகிறது.
இஸ்ரேலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,946 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்முலம், கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மொத்தம் 9,21,083 பாதிப்புகளையும், 6,593 இறப்புகளையும் இஸ்ரேல் பதிவுசெய்துள்ளது.
இந்நிலையில், பெரும்பாலான நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு, அவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், கட்டாயத் தனிமைப்படுத்தல் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.