காசாவில் வெடித்த மோதல்: மீண்டும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்திய இஸ்ரேல்
காசாவில் மீண்டும் போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக இஸ்ரேலிய தரப்பு அறிவித்துள்ளது.
காசாவில் அதிகரித்த பதற்றம்
அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தமானது சமீபத்தில் அமுலுக்கு வந்தது.
இருப்பினும் வார இறுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் இருதரப்புக்கும் இடையே உயிர் கொல்லும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதோடு, மனிதாபிமான உதவிகளும் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய வீரர்கள் இரண்டு பேரை கொன்றதாக வெளியான தகவலை அடுத்து, பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய படைகளும் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
அத்துடன் காசாவிற்கான மனிதாபிமான உதவிகளையும் நிறுத்துவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்தனர்.
மீண்டும் அமுலுக்கு வந்த போர் நிறுத்தம்
இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவம் போர் நிறுத்தத்தை மீண்டும் அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
மேலும் திங்கட்கிழமை முதல் காசாவிற்கான மனிதாபிமான உதவிகளின் விநியோகமும் தொடங்கப்படும் என்று பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேலிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |