கத்தாரை குறிவைத்த இஸ்ரேல்: தாக்குதலை முன்பே அறிந்த அமெரிக்கா தடுக்காதது ஏன்?
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நடவடிக்கையில் முக்கிய மத்தியஸ்தராகவும், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகவும் விளங்கும் கத்தார் மீது இஸ்ரேல் சமீபத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஹமாஸுன் முக்கிய தலைவர்களின் குடியிருப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 5 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
BIG BREAKING: 🚨🚨 Israel BOMBS Qatar
— ADAM (@AdameMedia) September 9, 2025
Israel has just bombed in Doha, the capital of Qatar
At least 10 explosions are reported in Doha as a result of Israeli strikes.
lsraeI is not compatible with peace.
Source: Barak Ravid (in comments)
pic.twitter.com/mzpcRTJB5u
ஆனால் அதே சமயம் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்ற யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதையும் ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்த தாக்குதலில் கத்தாரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் மற்றும் கத்தார் அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் குறித்து முன்பே அறிந்த அமெரிக்கா
அமெரிக்காவின் நட்பு நாடான கத்தாரில் ஹமாஸ் மூத்த அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து டெல் அவிவ் முன்னரே அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்ததாக வெள்ளை மாளிகைக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், தாக்குதலை துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டதோடு, ஹமாஸ் ஒழிப்பதற்கு இது தகுதியான இலக்கு என கூறியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி டிரம்ப் கத்தார் அரசுடன் இது தொடர்பாக பேசிய போது, தங்களின் தொடர் ஆதரவுக்கும், நட்புக்கும் நன்றி கூறியதாகவும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி, இந்த தாக்குதலை கண்டித்துடன், இது சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அப்பட்டமான மீறல் என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |