இஸ்ரேல்-அமெரிக்கா இடையே 20 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம்: கூடுதல் நிதியை பெற்ற திட்டம்
அமெரிக்கா உடனான நீண்ட கால பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - அமெரிக்கா ராணுவ ஒப்பந்தம்
அமெரிக்காவுடன் 20 ஆண்டு கால விரிவாக்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைவது தொடர்பான முயற்சியில் இஸ்ரேலிய அரசாங்கம் இறங்கி இருப்பதாக இருநாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வியாழக்கிழமை Axios செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் தற்போது செயல்பாட்டில் இருக்கும் 10 ஆண்டு கால பாதுகாப்பு ஒப்பந்தம் எதிர்வரும் 2028 ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இஸ்ரேல் முன்மொழிந்துள்ள இந்த ஒப்பந்தம் பழைய ஒப்பந்தத்தின் மாற்றாக இருக்கும்.
மேலும் இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த முன்மொழி ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டின் இறுதிக்குள் உறுதி செய்ய ஆர்வமாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பழைய ஒப்பந்தத்தின் கால அளவை இரட்டிப்பாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நிதியுதவி மற்றும் விதிமுறை மாற்றம்
பழைய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் நிதியுதவி அளிக்கும் நிலையில், புதிய ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் கூடுதல் நிதியுதவியை இஸ்ரேல் எதிர்பார்க்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் பழைய ஒப்பந்தத்தில், அமெரிக்க நிதியானது இராணுவ உதவிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதற்கு மாற்றாக தற்போது அந்த நிதியை அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று இஸ்ரேல் பரிந்துரைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |