கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்த வீரர்: லெபனானில் இஸ்ரேலிய வீரர்கள் அத்துமீறல்
லெபனானில் கன்னி மரியாள் சிலை வாயில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் சிகரெட் வைத்து அவமதிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம்
லெபனான் - இஸ்ரேல் இடையே நீடித்து வந்த போர் நடவடிக்கையானது கடந்த ஏப்ரல் 17ம் திகதி வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்தது.
ஆனால் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருவதுடன், லெபனான் கிராமங்களில் இஸ்ரேல் படை வீரர்கள் தொடர்ந்து நிலைக் கொண்டு வருகின்றனர்.
அத்துடன் லெபனானில் உள்ள சொத்துகளை இஸ்ரேலிய படை வீரர்கள் கொள்ளையடித்தும், சேதப்படுத்தியும் வருகின்றனர்.

சமீபத்தில் லெபனானின் தபெல் நகரில் இயேசு கிறிஸ்து சிலையை இஸ்ரேலிய இராணுவ சீருடை அணிந்த வீரர்கள் கால்களால் மிதித்து உடைக்கும் வீடியோ வைரலாகியது.
கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்த வீரர்
இந்நிலையில் லெபனானின் தபெல் நகரில் கன்னி மரியாள் சிலை வாயில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் சிகரெட் வைத்து அவமதிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை செய்த சம்பந்தப்பட்ட வீரரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டால் தக்க தண்டனை வழங்கப்படும் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்து இருப்பதாக பத்திரிகை செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன.
Outrage is growing over a photo of an Israeli soldier pushing a cigarette into the mouth of a statue of the Virgin Mary in southern Lebanon. pic.twitter.com/W5aY1soNxp
— Delanyo Agbe (@DelanyoAgbe1) May 7, 2026
அதே நேரத்தில் லெபனானின் 12 கிராமங்களில் இருந்து உடனடியாக இஸ்ரேலிய வீரர்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |