ஒரே நாளில் 254 பேர் உயிரிழப்பு - 10 நிமிடங்களில் 100 தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 254 பேர் உயிரிழந்துள்ளனர்.
254 பேர் உயிரிழப்பு
ஒரு மாத காலமாக ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரு வார தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த போர் நிறுத்தம் லெபனானிற்கு இல்லை, ஹிஸ்புல்லாவின் மீது தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ள இஸ்ரேல், லெபனான் மீது பாரிய வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
10 நிமிடங்களில் 100க்கும் அதிகமான இடங்களில் ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 254 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

10 அம்ச போர் நிறுத்த கோரிக்கைகளில், ஈரானின் கூட்டாளிகள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ள நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமரும், லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால், ஹார்மோஸ் நீரிணை மூடப்படும், போர் நிறுத்தத்தில் இருந்து விலக நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |