காசா எல்லைகளை கைப்பற்றிய இஸ்ரேல்: ஹமாஸுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
காசாவின் மொத்த எல்லைப் பகுதிகளை இஸ்ரேல் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவதியில் ரஃபா மக்கள்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான சண்டை கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி தொடங்கி விடாமல் நடந்து வருகிறது.
சமீபத்தில் ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தற்போது ரஃபா நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏற்கனவே சர்வதேச நீதிமன்றம் ரஃபா நகரில் தாக்குதல் நடத்த கூடாது என உத்தரவிட்டு இருந்த நிலையில், கைவிடப்பட்ட மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மிகப்பெரிய ராக்கெட் தாக்குதலை அரங்கேற்றியது.
இதில் பெண்கள் குழந்தைகள் என 45 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
காசாவின் பாதி மக்கள் அதாவது 2.3 மில்லியன் மக்கள் போர் காரணமாக ரஃபா நகரில் அகதிகளாக குடியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லைகளை கைப்பற்றிய இஸ்ரேல்
இந்நிலையில் எகிப்து நாட்டை ஒட்டிய காசாவின் எல்லைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருப்பதாக புதன்கிழமை இஸ்ரேல் நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட Philadelphi Corridor என்று அழைக்கப்படும் இந்த பகுதி ஹமாஸ் படைகளுக்கு சுவாசப் பாதையாக இருப்பதாக இஸ்ரேலிய ராணுவ தலைமை செய்தி தொடர்பாளர் Daniel Hagari தொலைக்காட்சியில் விவரித்துள்ளார்.
மேலும் இந்த பாதை வழியாகவே ஹமாஸ் அமைப்பினர் ஆயுத கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |