ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதலை தொடங்க தயார்: நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை
ஈரானை மீண்டும் அதிக பலத்துடன் தாக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தாக்குதலை மீண்டும் தொடங்க தயார்
ஏப்ரல் மாதத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் ஜூன் மாதத்தில் அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு பிறகு கடந்த சில நாட்களாக அமெரிக்கா - ஈரான் இடையே கடுமையான மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிரான தாக்குதலை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்பு எப்போதும் இல்லாத அசுர பலத்துடன் தாக்குதலை நடத்த தயாராக இருப்பதாகவும் அமைச்சர் காட்ஸ் சூளுரைத்துள்ளார்.
ஈரானின் வான்பரப்பில் மீண்டும் இஸ்ரேலின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், அச்சுறுத்தல்களை அகற்றவும், தேவைப்பட்டால் மீண்டும் போர் தாக்குதலை தொடங்கவும் இஸ்ரேலிய ராணுவம் தயாராகவும், எச்சரிக்கையுடனும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மோதல் இன்னும் முடியவில்லை
இதற்கிடையில் அரசு விழாவில் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த இரண்டு ராணுவ நடவடிக்கைகளிலும் ஈரான் மிகவும் பலவீனமடைந்து உள்ளது.
இஸ்ரேலிய விமானப் படையால் ஏமன் முதல் ஈரான் வரை தாக்குதல் நடத்த முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளோம். இருப்பினும் ஈரானுக்கு எதிரான மோதல் இன்னும் முடிவடையவில்லை என நெதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |