உலகின் அதிகம் வெறுக்கப்படும் நாடுகள்; 11வது இடத்தில் இந்தியா - முதலிடம் எந்த நாடு?
85 நாடுகளை சேர்ந்த 46,000 பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதனடிப்படையில், உலகில் அதிக விரும்பப்படும் மற்றும் வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிகம் விரும்பப்படும் நாடுகள்
ஜனநாயகப் பார்வைக் குறியீடு 2026 (Democracy Perception Index 2026) என்ற இந்த பட்டியலில், சுவிட்சர்லாந்து மற்றும் கனடா +36 என்ற புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

சுவிஸ் மக்கள் பாரம்பரியமாக அவர்களின் பண்பிற்கும் மரியாதைக்கும் பெயர் பெற்றவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.
அவர்கள் ஒதுங்கியிருப்பவர்களாகத் தோன்றினாலும், மிகவும் அன்புடன் வரவேற்பவர்கள் எனக் கூறப்படுகிறது. கனேடியர்கள் உலகிலேயே மிகவும் நல்ல மனிதர்களில் சிலர் என்று பொதுவாகக் கருதப்படுகிறார்கள்.
விருந்தோம்பல் பண்பு காரணமாக +34 புள்ளிகளுடன் ஜப்பான் 3வது இடத்தில் உள்ளது.
ஸ்வீடன், அதன் பண்பான மற்றும் மகிழ்ச்சியான குணத்திற்காக +33 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
இத்தாலியும், நோர்வேயும் தலா +32 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளன. இத்தாலியர்கள் தங்கள் விருந்தோம்பலுக்கும் உணவு மீதான காதலுக்கும் பெயர் பெற்றவர்கள். நோர்வே மக்கள் உலகின் மகிழ்ச்சியான மக்களாக உள்ளனர்.
இதேபோல், பிரித்தானியா மற்றும் +1 புள்ளிகள் பெற்றுள்ளது.
அதிகம் வெறுக்கப்படும் நாடு?
இதில், -24 மதிப்பெண்ணுடன் இஸ்ரேல் மிகவும் வெறுக்கப்படும் நாடாக உள்ளது.

-19 மதிப்பெண்களுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் வட கொரியா 2வது இடங்களில் உள்ளன.
ஈரான் -17 மதிப்பெண்களுடனும் 3வது இடத்திலும், அமெரிக்கா -16 மதிப்பெண்களுடன் 4வது இடத்திலும், ஈராக் - 13மதிப்பெண்களுடனும் 5வது இடத்திலும் உள்ளது.

இதில் எதிர்மறை மதிப்பெண் பெற்ற ஒரே மேற்கத்திய ஜனநாயக நாடாக அமெரிக்கா உள்ளது.
ரஷ்யா -11 மதிப்பெண்களுடனும் 6வது இடத்திலும், சிரியா 11 மதிப்பெண்களுடனும் 7வது இடத்திலும், பாகிஸ்தான் -9 மதிப்பெண்களுடன் 8வது இடத்திலும் உள்ளது.
பெலாரஸ், வெனிசுலா, மியான்மர் -5 மதிப்பெண்களுடனும் 9வது இடத்தில் உள்ளன. நைஜீரியா, கியூபா, லெபனான், வங்கதேசம் ஆகியவை -3 மதிப்பெண்களுடனும் 10வது இடத்தில் உள்ளன.
இந்தியா -2 என்ற புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் குறைந்த மதிப்பெண்ணுக்கான காரணங்கள் குறித்து இந்தக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |