ரஷ்யாவை பின்பற்றும் இஸ்ரேல்... மேற்குக் கரை தொடர்பில் பாலஸ்தீன அமைப்பு பகீர் குற்றச்சாட்டு
உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா கைப்பற்றியது போல, மேற்கு கரையை இஸ்ரேல் வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயல்வதாக பாலஸ்தீன அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் இராணுவம்
பல தசாப்தங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் இராணுவ டாங்கிகளை நிலைநிறுத்தியது.
இந்த நிலையில், மேற்குக் கரையின் வடக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கள் படைகள் பல மாதங்கள் தங்கியிருக்கும் என்று இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அங்கு வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், வாரக்கணக்கில் நீடித்த தீவிரமான இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த நிலையிலேயே இஸ்ரேல் இராணுவம் தங்கள் திட்டம் குறித்து தெரிவித்துள்ளது.
மேலும், ஜெனின் பகுதியில் டாங்கிகள் நிலைநிறுத்தப்படுவதையும் இராணுவம் அறிவித்துள்ளது, அங்கு அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு இரண்டாவது பாலஸ்தீனிய இன்டிஃபாடா அல்லது எழுச்சி முடிவடைந்த பின்னர், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் டாங்கிகள் களமிறக்கப்படுவது இதுவே முதல் முறை.
வேரோடு பிடுங்கி
இந்த நிலையில், இஸ்ரேலின் டாங்கிகளை களமிறக்குவதும், மூன்று பாலஸ்தீனிய அகதிகள் முகாம்களை வெளியேற்றுவதும் மேற்குக் கரையை வலுக்கட்டாயமாக இணைக்கும் ஆக்கிரமிப்பின் திட்டங்களை உறுதிப்படுத்துகிறது என்று இஸ்லாமிய ஜிஹாத் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை, ஹமாஸ் படைகளுடன் இணைந்து காஸாவில் இஸ்ரேலுக்கு எதிராக போரை நடத்திய போராளிக் குழு இது.
மேற்குக் கரை நகரங்களையும் அவற்றின் முகாம்களையும் பிரிப்பதை வலுப்படுத்தும் குடியேற்ற வழித்தடங்களை உருவாக்குவதன் மூலம் நமது மக்களை அவர்களின் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி இராணுவ ஆதிக்கத்தை பலப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றே அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் அந்தப் பகுதியில் உள்ள இராணுவ வீரர்களை திடீரென்று சந்தித்தார். 1967 முதல் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் இராணுவம் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |