இனி ராக்கெட் ஏவினால்... இது தான் கதி! போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹமாஸ் குழுவுக்கு இஸ்ரேலிய பிரதமர் கடும் எச்சரிக்கை
இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதியான நிலையில் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிக்குழுவுக்கு இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில், மே 21 முதல் போர்நிறுத்தததிற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க பாதுகாப்பு அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்ததை வியாழக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu அலுவலகம் உறுதிப்படுத்தியது.
இஸ்லாமிய ஜிகாத் அமைப்பும், பாலஸ்தீன ஹமாஸ் போராளி குழுவும் இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், இனி காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையான பதிலடி கொடுப்போம் என இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகள் இடையேயான போர் நிறுத்தத்தை எகிப்து கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது.
எகிப்து நாட்டின் ஜனாதிபதி Abdel Fattah al-Sisi,போர் நிறுத்தத்தை நிலைநிறுத்த இரண்டு பாதுகாப்பு பிரதிநிதிகளை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.