இஸ்ரேல் மீது அமெரிக்கா உட்பட நட்பு நாடுகள் அதிருப்தி! வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய புதிய வான் தாக்குதலில் 22 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையிலான தரைவழி தாக்குதல் அக்டோபர் 1ம் திகதி முதல் தொடங்கியது.
அதே நேரம் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
22 பேர் உயிரிழப்பு
இந்நிலையில், லெபனானின் பெய்ரூட் பகுதியில் வியாழக்கிழமை மாலை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதுடன், 117 பேர் படுகாயமடைந்து இருப்பதாக லெபனான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புர்ஜ் அபி ஹைதர்(Burj Abi Haidar) மற்றும் ராஸ் அல்-நபா(Ras al-Nabaa) ஆகிய இரண்டு சுற்றுப்புறங்களை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதலில் நடத்தியது.
இந்த தாக்குதலில் 8 மாடி கட்டிடம் ஒன்று குறி வைத்து தாக்கப்பட்டது.
மேலும், தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீது வியாழக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினர்.
இதில் 2 பேர் வரை காயமடைந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உட்பட இஸ்ரேலின் நட்பு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |