பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் தகுதி: ஐ நா சாசனத்தை கிழித்த இஸ்ரேலிய தூதர்!
பாலஸ்தீன உறுப்பினர் தீர்மானத்திற்கு பிறகு ஆக்ரோஷமான இஸ்ரேலிய தூதர் ஐக்கிய நாடுகள் சாசனத்தை கிழித்து எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்திற்கான உறுப்பினர் தகுதி
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு(Palestine) முழு உறுப்பினர் தகுதி வழங்குவது தொடர்பான வாக்குப்பதிவுக்கு நேற்று நடைபெற்றது.
இந்த வாக்குபதிவில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக ஏற்றுக்கொள்ள பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தும் தீர்மானத்தை பெரும்பான்மையுடன் ஒப்புதல் அளித்தது.
Palestine has been granted expanded rights and privileges at the UN with overwhelming support. 143 nations voted in favour, with 9 against and 25 abstentions.
— Al Jazeera English (@AJEnglish) May 10, 2024
Although upgraded, the new status does not allow Palestine to vote with the same rights as full member states. pic.twitter.com/M73jwo88sL
இந்த தீர்மானம் இந்தியா உட்பட 143 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம் இந்த வாக்குபதிவில் 25 நாடுகள் பங்கேற்கவில்லை மற்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்(Israel) உட்பட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன.
தற்போது பாலஸ்தீனம் பார்வையாளர் (observer) தகுதியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா சாசனத்தை கிழித்தெறிந்த இஸ்ரேல்
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் நடைபெற்ற உரையின் போது, இஸ்ரேலிய தூதர் கிலாட் எர்டான், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஒரு பிரதியை(UN charter) கிழித்தெறிந்தார்.
இஸ்ரேலிய தூதர் கிலாட் எர்டான்(Gilad Erdan) இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து பேசினார், இது ஐக்கிய நாடுகள் சாசனத்தின் "நேரடி மீறல்" என்றும், பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தை புறக்கணிக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டினார்.
Watch my speech against the despicable decision to give rights of a state to the terror supporting Palestinian Authority. I shredded the "UN Charter" to illustrate what the General Assembly is doing by subverting the Security Council and supporting the entry of a terror entity.
— Ambassador Gilad Erdan גלעד ארדן (@giladerdan1) May 10, 2024
சாசனத்தை கிழித்தெறிவது பொதுச் சபையின் செயல்களுக்கான ஒரு குறியீட்டு பிரதிபலிப்பு என்று அவர் கூறினார். "இந்த வாக்குப்பதிவு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது, இந்த தருணத்தில் அடிப்படை கொள்கைகளை சீர்குலைக்கும் செயலை உலகம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த வாக்குப்பதிவு எவ்வாறு ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நம்பகத்தன்மையையே அழிக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். உங்கள் செயல்களால் நீங்கள் அடிப்படையாக அதன் நியாயத்தை அழித்து வருகிறீர்கள்.” என்றும் கிலாட் எர்டான் பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |