கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்... உயிர் பயத்தில் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பத்தினர்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ள நிலையில், காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் நிலை குறித்து குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம்
அக்டோபர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் மற்றும் Shin Bet என்ற பாதுகாப்பு சேவை அமைப்பு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அக்டோபர் 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஹமாஸ் படைகளின் துபபக்கிச் சூடு சம்பவமே, ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் காஸா போருக்கு காரணம். இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில்,
ஏற்கனவே காயங்களுடன் உயிர் தப்பி, ஒளிந்திருந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் நிலை தொடர்பில் குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். மொத்த பணயக்கைதிகளையும் மீட்காமல் போர் வெற்றிபெற்றதாக கூற முடியாது என, ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்ட 24 வயது மகனுக்காக காத்திருக்கும் இஸ்ரேலிய தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 117 பணயக்கைதிகள் காஸாவில் இருந்து உயிருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் மட்டும் பெண்கள், சிறார்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என 105 பேர்களை ஹமாஸ் விடுவித்தது.
உயிருடன் இருக்கலாம்
8 பேர்களை இஸ்ரேல் ராணுவம் காப்பாற்றியது. 37 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவே ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் மேலும் 101 பேர்கள் காஸாவில் பணயக்கைதிகளாக உள்ளனர்.
இதில் குறைந்தது சரிபாதி பேர்கள் உயிருடன் இருக்கலாம் என்றே இஸ்ரேல் அதிகாரிகள் நம்புகின்றனர். அக்டோபர் 7ம் திகதி நடந்த ஹமாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 42,000 கடந்துள்ளது.
காஸாவின் பெரும்பகுதி தரைமட்டமாகியுள்ளது. பெரும்பாலான மக்கள் வெளியேறியுள்ளனர். ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டுள்ளதை அடுத்து, இனி பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |